கலைஞர் மறைவுக்கு பிறகு மீண்டும் தி.மு.கவில் ஆதிக்கம் செலுத்த அழகிரி தயாராகி வருகிறார். ஆனால் ஆனால், ஸ்டாலின்  மீண்டும் அழகிரியை கட்சிக்குள் அனுமதிப்பது என்பது வேலியில் போகும் ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டுக் கொண்ட கதையாகிவிடும் என்று கருதுகிறார்.

அழகிரி கட்சியில் தனது மகன் துரை தயாநிதியை முன்னிலைப்படுத்த முயற்சித்து வருகிறார். இது குறித்து தனது சகோதரி செல்வியிடமும் அழகிரி மனம் விட்டு பேசியுள்ளார். என்னை பொறுத்தவரை மத்திய அமைச்சர் என்ற உயரமே போதுமானது. இனியும் தி.மு.கவில் பொறுப்புக்கு வந்து நான் எதையும் பெரிதாக சாதித்துவிடப்போவதில்லை. ஆனால் என் மகன் நிச்சயம் தி.மு.கவில் மிக உயரத்திற்கு செல்ல வேண்டும்.  பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக என் மகனுக்கு தி.மு.கவில் பொறுப்பு எதையும் கொடுக்கவில்லை என்றால் நான் அடுத்ததாக என்ன செய்வேன் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மேலும் என்னை அந்த சமயத்தில் யாராலும் கட்டுப்படுத்தவும் முடியாது என செல்வி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
இது குறித்து கடந்த வெள்ளியன்று இரவு நீண்ட நேரம் கோபாலபுரம் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. நிச்சயமாக அழகிரியின் மகன் துரைக்கு கட்சியில் நல்ல பதவியை கொடுக்க வேண்டும் என்று செல்வி ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஸ்டாலினோ தி.மு.க என்றால் இனி தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கனிமொழியும் தற்போதைக்கு மகளிர் அணி என்ற அளவில் இருப்பதோடு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையில் உள்ளார்.

ஸ்டாலினின் மனநிலையை புரிந்துகொண்ட அழகிரி, நேற்று ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,  திமுகவில் கட்சிப் பொறுப்புகளை விலைபேசி விற்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் பலருமே ரஜினி கட்சியோடு தொடர்பில் இருக்கிறார்கள். இப்படியே போனால், திமுகவை இப்போது இருக்கும் தலைமை அழித்துவிடும். தலைவர் கலைஞரின் ஆன்மா அவர்களை எல்லாம் சும்மா விடாது. நான் இணைவதிலோ திமுகவுக்கு வருவதிலோ ஸ்டாலினுக்குத் துளியும் விருப்பம் இல்லை. திமுகவுக்குள் நான் வந்தால் வலிமையான தலைவராக மாறிவிடுவேன் என்ற பயம் என கர்ஜித்திருக்கிறார்.

 இதனை தொடர்ந்து ஸ்டாலினுக்கு செல்வி மூலம் தூது அனுப்பியிருக்கிறார் அழகிரி. ஸ்டாலினிடம் பேசிய செல்வி அழகிரியை தற்போதைக்கு சாந்தப்படுத்தவில்லை என்றால் நிச்சயம் நமது இமேஜை டேமேஜ் செய்துவிடுவார் என்று ஸ்டாலினிடம் கூறியுள்ளார். ஆனால் என்ன தான் செல்வி எடுத்துக் கூறினாலும்,  ஸ்டாலினோ  அழகிரியை கட்சிக்குள் அண்டவிடக்கூடாது என திட்டம் இதிதனைத் தொடர்ந்து தான்  இன்று காலை கலைஞர் சமாதிக்கு சென்ற அழகிரி கொட்டி தீர்த்துவிட்டார்.

அழகிரியால் கடுப்பான மேல்மட்ட நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். தலைவர் மறைந்து இன்னும் ஒருவாரம் கூட முழுசா முடியல, இவரு ஏன் இப்படி பண்றாரு என கேட்டிருக்கிரார்கள். கோபத்தில் இருந்த நிர்வாகிகளை சமாதனப் படுத்திய ஸ்டாலின்  எனக்கு முன்னாடியே இப்படியான சிக்கல் வரும் என்று எனக்கு தெரியும், தலைவர்   உடலை அடக்கம் செய்துவிட்டு வந்த அன்றே, ‘அவரு என்ன வேணும்னாலும் பேசுவாரு. குழப்பத்தை உண்டாக்குவாரு. எதுக்கும் யாரும் எந்த பதிலும் சொல்ல வேண்டாம். நாம திருப்பி பேசப் பேசத்தான் பிரச்னை பெருசாகும். அமைதியா விட்டுட்டா அப்படியே அடங்கிப்போயிடும். அவரை அடக்குறதுக்கு ஒரே வழி நாம கண்டுக்காமல் விடுறதுதான். அவரு சொல்லி யாரும் கட்சியில் இருந்து போகவும் மாட்டாங்க. அவரு பின்னாடி நிற்கவும் மாட்டாங்க’ என்று  முக ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு விட்டிருக்கிறார். ஆனால் மனம் போருக்க முடியாத  ஜெ. அன்பழகன் பதிலடி கொடுத்துவிட்டார்.

இதனையடுத்து அன்பழகனிடம் பேசிய ஸ்டாலின். ‘நான் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே... அவரு இப்படித்தான் பேசுவாரு என்பது எனக்கு தெரியும். இதை நான் அடுத்த நாளே எதிர்பார்த்தேன். நாலு நாளைக்குப் பிறகுதானே அவரு பேசியிருக்காரு... அப்படியே பேசட்டும் விட்டுடுங்க நீங்க எதுவும் பேசாதீங்க, அவரு பின்னாடி  யாருமே போக மாட்டாங்க.  அவர் நம்மள மிரட்டிப் பார்க்கலாம்னு நெனைக்கிறாரு அதுமட்டும் நடக்காது,  எது வானாலும் பார்த்துக்கலாம்  விட்ருங்க நாளு நாளைக்கு தொலைகாட்சியில கத்திட்டு மதுரைக்கு கிளம்பி போயிடுவாரு நீங்க யாரும் பதில் பேசாதீங்க  என கொந்தளித்த அன்பழகனை கூல்  செய்துள்ளார் ஸ்டாலின்.