முழு அடைப்பு போராட்டம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

விவசாயிகள் பிரச்சனைக்காக கடந்த 16 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. அப்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி 22 ஆம் தேதி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம், 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.இந்தச் சூழலில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அப்போது முழு அடைப்பு போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள்,விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.இதற்கிடையே இன்று மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் அனைத்துக் கட்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது