திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல், மக்கள் பிரச்சனைகளுக்காக அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.