அப்போது வைகோ அவரை சந்திக்க வந்த தலைவர்களை அவ்வப்பொழுது எழுந்து நின்று, எழுந்து நின்று வரவேற்றதால் கடுப்பான துரை முருகன் யோவ் உட்காருய்யா !! கல்யாண வூடாட்டம்… எல்லோரையும் வா. வா.. கூப்பிட்டுக்கிட்டு என கலாய்த்ததால் அந்த இடமே கலகலப்பானது.

நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் நக்கீரன் கோபாலை விடுவிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டும் என எச்சத்திருந்தார்.

இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோபாலை பார்க்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், வைகோவை தடுத்து நிறுத்தினார்கள். மேலும், கைது செய்யப்பட்ட கோபாலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், போலீஸ் நிலையம் முன்பு வைகோ தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை போலீசார் கைது செய்து சைதாப்பாட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதையடுத்து அவரை பார்ப்பதற்காக ஸ்டாலின், துரை முருகன், ஆ,ராசா உள்ளிட்டோர் அந்த திருமண மண்டபத்துக்கு வந்தனர்.

அவர்களை வரவேற்ற வைகோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் நடந்தது குறித்த விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலும் பல நிர்வாகிகள் வரிசையாக வைகோவை சந்திக்க மண்டபத்துக்கு வந்தனர். அவர்களை வைகோ அவ்வப் போது எழுந்து நின்று வரவேற்றார்.

இதனால் கடுப்பான துரை முருகன், யோவ் உட்காருய்யா .. கல்யாண வூடாட்டம்… எல்லோரையும் வா. வா.. கூப்பிட்டுக்கிட்டு என கலாய்த்ததால் அந்த இடமே கலகலப்பானது.