கால் அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் ’டைட்டேனியம்’ கம்பி ஒன்று பொருத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசனுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனைபடி கமல்ஹாசனுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த கம்பியை அகற்றுவதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு சென்று கமல்ஹாசனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நண்பர் 'கலைஞானி' @ikamalhaasan அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன்.விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என அந்த பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.