Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். உச்சத்தில் குடும்ப சண்டை. முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி.

மொத்தத்தில் திமுகவினர் பொய்களை நம்பி மட்டுமே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலோடு திமுக காணாமல் போய்விடும், தினம் தினம் வாக்குறுதி என்ற பெயரில் சாத்தியம் இல்லாதவைகளை எல்லாம் பொய் மூட்டைகளாக திமுக  தலைவர் ஸ்டாலின் அவிழ்த்து விட்டுள்ளார்.  

Stalin is a conclusion to the DMK. Family quarrels at the peak. The former minister was shocked.
Author
Chennai, First Published Feb 27, 2021, 11:16 AM IST

திமுக பொய்களை மட்டுமே நம்பி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், வரும் தேர்தலோடு அந்த கட்சி காணாமல் போய்விடும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்  நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு  மாத காலமே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள அதிமுக மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறது. 

Stalin is a conclusion to the DMK. Family quarrels at the peak. The former minister was shocked.

இந்நிலையில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தத் தேர்தலின் முடிவில் திமுக என்ற கட்சி  குடும்ப சண்டையால் துண்டுதுண்டாக உடைந்துவிடம். அந்தக் கட்சிக்கு அண்ணா முன்னுரை எழுதினார்,  கருணாநிதி விளக்க உரை எழுதினார், அக்கட்சிக்கு இப்போது  ஸ்டாலின் முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்.

 Stalin is a conclusion to the DMK. Family quarrels at the peak. The former minister was shocked.

மொத்தத்தில் திமுகவினர் பொய்களை நம்பி மட்டுமே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலோடு திமுக காணாமல் போய்விடும், தினம் தினம் வாக்குறுதி என்ற பெயரில் சாத்தியம் இல்லாதவைகளை எல்லாம் பொய் மூட்டைகளாக திமுக  தலைவர் ஸ்டாலின் அவிழ்த்து விட்டுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கை குழுவில் நானும் இடம் பெற்றுள்ளேன், எங்கள் குழுவில் உள்ளவர்கள் மக்களுக்கு தேவையானதை செய்ய சாத்தியமுள்ள திட்டங்களை மட்டுமே அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மீண்டும் அதிமுக பொறுப்பேற்க, ரத்தத்தின் ரத்தங்கள் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios