தமிழகத்தில் காவிரி மேலாண்மை விவாகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி கோரிக்கை விடுத்துள்ள மு.க.ஸ்டாலின் திடீரென அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்து அனைத்து கட்சிகளுக்கு கடிதமும் அனுப்பி உள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவான நிலை எடுத்ததால் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

பெரும்பாலான எதிர்கட்சிகள் இணைந்து இந்த பிரச்சனையில் ரயில் மறியல் போராட்டத்தை 48 மணிநேரம் நடத்தினர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அதற்கு அவசியமில்லை என ஆளுங்கட்சி தரப்பில் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான கடிதத்தை மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி உள்ளார் .

திமுக கூட்டும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளும் என காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார்.