திமுக தலைமையில் வரும் செவ்வாய் கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்பில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் கலந்த கொள்ள வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினி அழைப்பு விடுத்தார்.

வங்கிக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 40 நாட்களாக கோராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதிலும் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக வரும் 25 ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேறகும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது,

இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தங்களது வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு வாடி நிற்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறவுள்ள இந்தி போராட்டத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாகண்ணு போராட்டத்தை நிறுத்திவிட்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதே போன்று அடுத்தடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் அய்யாகண்ணு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.