Asianet News TamilAsianet News Tamil

திருநீறை அவமதித்த ஸ்டாலின்.. டால்கம்பவுடர் போல பயன்படுத்தியதாக அண்ணாமலை விமர்சனம்..!

வேல் பிரச்சாரத்துக்கும் மதரீதியான சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் வேல் பிரச்சாரத்துக்கு அரசு தடை விதிக்காது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Stalin insulted Vibhuti...BJP vice president Annamalai
Author
Karur, First Published Nov 1, 2020, 4:04 PM IST

வேல் பிரச்சாரத்துக்கும் மதரீதியான சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் வேல் பிரச்சாரத்துக்கு அரசு தடை விதிக்காது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு மீதம் இருந்த விபூதியை தரையில் கொட்டியுள்ளார்.

Stalin insulted Vibhuti...BJP vice president Annamalai

இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவில் அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்துவது போலநடந்துகொண்டார். திருநீறை டால்கம்பவுடர் போல பயன்படுத்தியுள்ளார். பாஜக இதை வன்மையாக கண்டிக்கிறது.

Stalin insulted Vibhuti...BJP vice president Annamalai

கொள்கையை விட்டுக் கொடுக்காத பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், கொள்கையே இல்லாத ஸ்டாலின் நடந்துகொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றமாகும். இச்சம்பவத்துக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக ஸ்டாலின் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

Stalin insulted Vibhuti...BJP vice president Annamalai

பாஜக எந்த மதத்துக்கும் எதிரானதல்ல. வேல் பிரச்சாரம் நவம்பர் 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி நிறைவடைகிறது.  இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேல் பிரச்சாரத்துக்கும் மதரீதியான சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் வேல் பிரச்சாரத்துக்கு அரசு தடை விதிக்காது என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios