Asianet News TamilAsianet News Tamil

தங்கச்சி கனிமொழி வளர்ச்சிக்கு தடை போடுகிறார் ஸ்டாலின்... திமுகவின் குட்டை உடைத்த அமைச்சர் ஜெயக்குமார்..!

அதிமுகவின் சின்னத்தை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவருடன் அதிமுக இணையாது. அவரது விடுதலையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பெரிய பாதிப்பு இருக்கும். அதிமுக பார்த்து ஸ்டாலின் சொல்கிறார் கட்சி உடைந்து விடும். இது என்ன மண் சட்டியா உடைவதற்கு. 

Stalin inhibits Kanimozhi development...minister jayakumar
Author
Chennai, First Published Dec 30, 2020, 1:26 PM IST

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் அதிமுகவுக்குதான் வாக்களிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை மந்தைவெளியில் அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை கூறி அரசியலுக்கு வருவதை தவிர்த்து உள்ளார். எனவே இன்று போல் என்றும் அவர் வாழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் வராமல் சென்றாலும் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ரஜினி ரசிகர் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.  

Stalin inhibits Kanimozhi development...minister jayakumar

அதிமுகவின் சின்னத்தை முடக்க எந்த கொம்பனாலும் முடியாது. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவருடன் அதிமுக இணையாது. அவரது விடுதலையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பெரிய பாதிப்பு இருக்கும். அதிமுக பார்த்து ஸ்டாலின் சொல்கிறார் கட்சி உடைந்து விடும். இது என்ன மண் சட்டியா உடைவதற்கு. அதிமுக என்பது எஃகு கோட்டை. இதை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. திமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் பெற்றுள்ளது.

Stalin inhibits Kanimozhi development...minister jayakumar

மேலும், அதிமுகவில் தொண்டர்கள் கூட முதல்வர் ஆகலாம் என்ற நிலை உள்ள நிலையில் திமுகவில் ஒரு சிலரின் புகைப்படங்கள் மட்டுமே கட்சி போஸ்டரில் இடம் பெறவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இதற்கு காரணம் திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் வளர்ந்து விடுவார்கள் என்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios