ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரி அந்த மாநில மக்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என முழங்கியவர் தீரன் சின்னமலை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 212 ஆவத நினைவு நாளையொட்டி கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி அவர், தீரன் சின்னமலை எந்த லட்சியத்துடன் வாழ்ந்தாரோ, அந்த லட்சியத்தை பொது வாழ்வில்  ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரி அந்த மாநில மக்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மாநில வரி மாநில மக்களுக்கே என முழங்கியவர் தீரன் சின்னமலை என ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, குட்கா புகழ் அமைச்சர் விஜய பாஸ்கரிடமே அது குறித்து கேளுங்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.