புதுக்கோட்டையில் : திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவில், மணமகனின் பெயரை மாற்றி கூறி உளறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை என்ற கிராமத்தில் திமுக பிரமுகர் திருமண இல்ல விழா நடைபெற்றது. காசி விஸ்வநாதன் - பொற்கொடி தம்பதியரின் மகன் சுப்பிரமணியனுக்கும், அடைக்கல காத்தான் - பூபதி ஆகியோரின் மகள் பிரதீபாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழா மேடையில் உரையாற்றிய ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது, பெண்ணின் மாமனாரை (காசி விஸ்வநாதன்) மணமகன் என அழைத்ததால், திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவரும் திடுக்கிட்டனர்.
சில நொடிகளில் தன் உளறல் பேச்சை உணர்ந்த அவர், அதை திருத்தி கொண்டு, சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறி சமாளித்தார். பேசி முடிப்பதற்குள் மூன்று இடங்களில் இதுபோல தடுமாறினார்.
பொதுவாக அரசியல் தலைவர்கள் சில நேரங்களில் பெயர்களை மாற்றி உச்சரிப்பது என்பது வழக்கமானது என்றாலும் திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி உளறிக் கொட்டி வருவது அக்கட்சி தொண்டர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 4, 2019, 7:12 AM IST