உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டை காண நேரில் செல்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிகட்டுக்கு நீதிமன்ற தடை விதித்த பின் அமைதியாய் கிடந்த தமிழகம் போராட்ட உருவில் ஆர்ப்பரித்தது.

இதனை கண்ட மதிய மாநில அரசுகள் அப்போதுதான் சுறுசுறுப்பாக நடவடிகைகள் மேற்கொண்டு அவசர சட்டம் கொண்டு வந்தது.

அதை தடுக்காமல் உதவிகளை மட்டுமே செய்தது மத்திய அரசு.

இந்த சூழ்நிலையில் தமிழக எதிர்கட்சி தலைவர் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அலங்காநல்லூரில் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரான மூர்த்தி எம்எல்ஏ ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு தொடர்பான விவகாரங்களில் பங்கெடுத்து வந்தார்.

அவரது ஏற்பாட்டின் பேரில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்தனர்.

ஏற்கெனவே முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்த நிலையில் ஸ்டாலினையும் அழைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தான் பங்கேற்க போவதை உறுதி செய்துள்ளார்.

எனவே முதலமைச்சர் அல்லது சசிகலா யாராவது ஒருவர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் வாடிவசலை பொறுத்தவரை பாரவையாளர் மாடம் மிகசிறிய அளவில் இருக்கும். ஆளுங்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கு அமர்ந்தால், ஸ்டாலின் அமன்ர்து பார்க்க இடவசதி செய்து கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.