Asianet News TamilAsianet News Tamil

ரம்ஜான் வாழ்த்து கூறியபடியே வாக்கு சேகரித்த ஸ்டாலின் !! பள்ளபட்டியில் உற்சாகம் !!

இடைத் தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டி பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு கூடியிருந்த இஸ்லாமிய பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.
 

stalin in arakurichi
Author
Aravakurichi, First Published May 7, 2019, 9:03 PM IST

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று  பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். நடைபயணமாக பேருந்து நிலையம் வந்த அவர் அப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு உள்ளே சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தும் பெரும்பாலான பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டினர்

stalin in arakurichi
.
இதையடுத்து அங்குள்ள கடைவீதிகளில் நடந்து வந்த மு.க.ஸ்டாலினை பின் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்தனர். உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி கிடப்பதால் பள்ளப்பட்டியில் பல் வேறு பகுதியில் சுகாதார சீர்கேடுகள் மிகுந்து காணப்படுவதாக  பலர் புகார் தெரிவித்தனர்.

stalin in arakurichi

அவர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட் சிக்கு வந்ததும் பொதுமக்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வியாபாரிகளிடம் இன்றைய விலை நிலவரங்களை கேட்டறிந்தார்.  வியாபாரிகள் பலர் காய்கறிகளையும், மாம்பழம் உள்ளிட்ட பழங்களை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினர்.

stalin in arakurichi

அதனை மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில் அவரை பின்தொடர்ந்து வந்த அனைத்து இஸ்லாமியர்களுக்கு இன்று ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

stalin in arakurichi

பிரசாரத்தின்போது ஏராளமான சிறுவர்கள் மு.க.ஸ்டாலின் கைகளை பற்றிக்கொண்டு சிறிது தூரம் நடந்து வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். 

stalin in arakurichi

அப்போது ஏராளமான இஸ்லமிய பெண்கள் அவருக்கு கைகுலுக்கி வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பெண்கள் இந்த தேர்தலில் உங்களுக்குத்தான் வாக்களிப் போம், எங்கள் குறைகளை நீங்கள் தீர்த்து வையுங்கள் என்றனர்.

stalin in arakurichi

தேர்தல் முடிவுக்கு பிறகு நமது ஆட்சிதான் வரப்போகிறது. அப்போது உங்கள் கோரிக்கைள் அனைத்தும் சரி செய்யப்படும். அத்துடன் தி.மு.க.வின் இந்த தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் அவர்களிடம்  உறுதி அளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios