stalin idea to defeat bjp

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக அடைந்துள்ள வெற்றி, அக்கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

2015 மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அரிதி பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அதன்பிறகு நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்தாலும் வெற்றி என்னவோ பாஜகவிற்கே கிடைக்கிறது. 

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றும் கூட்டணி மூலமும் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சலிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்யும் பிரசாரம் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. இந்நிலையில், பாஜகவின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், 2 மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகும் பாஜகவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பாஜகவின் இந்த வெற்றி, ஜனநாயகத்தைக் காக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதையே காட்டுவதாக தெரிவித்தார். மதசார்பற்ற கட்சியில் ஓரணியில் திரண்டு எதிர்கொண்டால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதையே ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.