விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறினால் வரவேற்கிறோம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு குறித்து ஆளுநர் இதுவரை முடிவெடுக்காத நிலையில், இதற்காக அதிமுகவுடன் இணைந்து போராட தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன்;- 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசி நல்ல முடிவு வரும் எனக் கூறிய நிலையில் 7.5% இடஒதுக்கீடு வழங்க அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயாராக உள்ளது எனக் கூறுவது தேவையற்ற ஒன்று. ஸ்டாலின் போராட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அதற்காக போராடட்டும்.

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறினால் வரவேற்கிறோம். நடிகர் விஜய் ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவிற்கு நேரடி ஆதரவு தெரிவித்தார். ஆனால், தற்போது அவரது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக நேரம் வரும்போது மாற்றுவேன் என அவரது தந்தை அறிவித்துள்ளார். அதனைதான் வரவேற்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.