ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டத்தில் பேசிய ஸ்டாலின் போராட்டக்காரர்களை தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சிக்கும் சுப்ரமணியம் சுவாமியை ஒரு வார்த்தை கூட விமர்சிக்காதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
போராட்ட களத்தில் புடம் போட்ட தங்கம் எதையும் தாங்கள் தான் சாதித்தோம் என பொதுவான போராட்டங்களில் கிடைத்த வெற்றியை கூட தனிப்பட்ட முறையில் தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக அறிவித்து பெருமிதம் கொள்வார்கள்.
போராட்டத்தின் முன்னோடிகள் என தங்களை கூறிக்கொள்ளும் திமுகவினர் ஜல்லிக்கட்டு போட்டி விவகாரத்தில்  போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் திமுக போன்ற  போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தி டுவிட்டரில் சுப்ரமணியம் சுவாமி திட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரமணியம் சுவாமிக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பதிலளித்தனர். அவர்களிடம் கோபப்பட்ட சுப்ரமணியம் சுவாமி பலரை பிளாக் செய்துள்ளார். 
சுப்ரமணியம் சுவாமியின் கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துவர மறுநாளான இன்று திமுக ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுப்பார் அல்லது துரைமுருகன் அவரது பாணியில் பதிலளிப்பார் என திமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இருவருமே சுப்ரமணியம் சுவாமிக்கு ஒரு பதிலை கூட அளிக்க வில்லை. போராட்டம் நடத்துபவர்களை பொறுக்கிகள் என்றும் , சாக்கடை குழிக்குள் இருக்கும் எலிகள் என்றும் பேசும் சுப்ரமணியம் சுவாமி காவிரி பிரச்சனையிலும் இதே போன்று பேசினார். 
ஆனால் அவருக்கு தக்க பதிலடி கொடுக்காமல் கண்டுகொள்ளாமல் போவது என்ன நடைமுறை என திமுக இளைஞர்கள் சிலர் தங்களுக்குள் கோபப்பட்டு பேசிக்கொண்டனர். அவர்களுக்கு கொஞ்சமாவது கோபம் இருக்காதா? எல்லா நேரங்களிலும் அடையாள பூர்வ போராட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது அல்லவா?