இந்தியாவுக்கு அரங்கு ஒதுக்கப்பட்டு அதில் மகாத்மா காந்தியின் பெயரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்த அரங்கை திறந்துவைத்தார். இந்தியாவின் கலை கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்ட அரங்கில் தமிழ்நாட்டுக்கென தனி அரங்கம் அமைக்க அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. 

முதல்வரான பிறகு முதல் முறையாக மு.க ஸ்டாலின் நாளை ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட உள்ளார். துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் கலந்துகொள்ள செல்லும் அவருடன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் செல்ல உள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் வெள்ள பாதிப்பின்போது அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் திமுகவுக்கு எதிராக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் ஆட்சிக்கு வந்தது முதலே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துபையில் நடக்க உள்ள தொழிற் கண்காட்சியில் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் நாளை அவர் நான்கு நாள் பயணமாக துபாய் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமானது முதல் கனமழை, வெள்ள பாதிப்பு, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்த பணிகள் இருந்ததால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த அவர், முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் முறையாக நாளை துபாய் செல்ல உள்ளார். அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகின் பிரமாண்ட தொழில் கண்காட்சியான துபைய் எக்ஸ்போ தொடங்கிய நிலையில் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தனித்தனியே அரங்குகள் அமைத்து தொழில், கலை, கலாச்சாரம், பண்பாடு குறித்து உலக நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இதில் இந்தியாவுக்கு அரங்கு ஒதுக்கப்பட்டு அதில் மகாத்மா காந்தியின் பெயரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்த அரங்கை திறந்துவைத்தார். இந்தியாவின் கலை கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்ட அரங்கில் தமிழ்நாட்டுக்கென தனி அரங்கம் அமைக்க அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதில் தமிழ்நாடு அரசு கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இந்த அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அங்கு சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.

இதற்காக தமிழக முதலமைச்சர் மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார். இதற்காக நாளை சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் புறப்பட உள்ளார். அவருடன் திமுக இளைஞரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி செல்லவுள்ளார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணமாக துபாய் வருகை தரும் ஸ்டாலினை வரவேற்க துபாய் திமுக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு துபையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக நாளை மாலை துபாய் பயணம் சர்வதேச பல்தொழில் கண்காட்சியில் தமிழக அரசின் அரங்குகளை திறந்து வைக்கிறார்..

192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சார்ஜாவில் உள்ள பல்கலை தமிழக முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது. முதல்வருடன் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, முதல்வரின் தனி செயலர்கள் உதயாசந்திரன் , உமாநாத் , அனுஜார்ஜ் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.தனது சுற்றுபயணத்தை முடித்து கொண்டு வரும் 28 ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.