கருணாநிதி வல்லவர் ஆனால் நல்லவர் கிடையாது. ஆனால் ஸ்டாலினுக்கு எழுத்துத் திறமையும் கிடையாது, பேச்சுத் திறமையும் கிடையாது, ஆனால் முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆகியோர் சட்டசபையில் குறிப்பு இல்லாமல் பேசுகின்றனர். அப்படி ஸ்டாலினால் பேச முடியுமா? என மதுரை புறநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மதுரை மேற்கு மாவட்ட ஒன்றிய இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் பேசியதாவது: 

தற்போது நடைபெறும் இந்த இளைஞர் கூட்டம் அதிமுகவின் 2021 ஆம் ஆண்டு  தேர்தலுக்கான வெற்றிக்கு ஆச்சாரமாக திகழ்கிறது. மத்திய அரசின் அமைச்சரவையில் திமுக இடம்பெறும்போது மாநில உரிமைகள் குறித்து வாய் திறக்க மாட்டார்கள், ஆனால் எதிர்க்கட்சியான பிறகு மாநில சுயாட்சி என பேசி மக்களை ஏமாற்றுவார்கள். இந்த ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியாது, ஏன் எனில் எங்கேயும் மின்வெட்டு இல்லை, ஜாதி, மத கலவரம் இல்லை, சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட எல்லா அடிப்படை தேவைகளும் 100% நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தின் உரிமைகளை காக்க பல்வேறு சட்டங்களை முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். திமுக மெல்ல மெல்ல வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் தகுதி கிடையவே கிடையாது. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி வல்லவர் ஆனால் நல்லவர் கிடையாது. ஆனால் ஸ்டாலினுக்கு எழுத்துத் திறமையும் கிடையாது, பேச்சுத் திறமையும் கிடையாது, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சட்டசபையில் குறிப்பு இல்லாமல் பேசுகின்றனர், அதுபோன்று ஸ்டாலினால் பேச முடியுமா என கேள்வி எழுப்பிய ராஜன்செல்லப்பா, கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர ஸ்டாலினுக்கு வேறு எந்த தகுதியும் இல்லை.  எனவே ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் தகுதி கிடையாது எனக் கூறினார். 1981, 1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் எல்லாம்  மாபெரும் வெற்றி பெற்றது. அதே வரிசையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டிலும் அதிமுக வெற்றி பெறும். கட்சியின் இளைஞர்களே அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி கட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும் என அவர் அப்போது கேட்டுக் கொண்டார்.