Asianet News TamilAsianet News Tamil

ஆட்டம் பாம் வைத்த கு.க.செல்வம்.... தமிழ்கடவுள் முருகனை இழித்தவர்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை..!

பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், ஜே.பி.நட்டாவை சந்தித்ததற்காக முடிந்தால் என் மீது திமுக நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.
 

Stalin did not condemn those who insulted the Tamil god Murugan
Author
Tamil Nadu, First Published Aug 5, 2020, 9:18 AM IST

பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், ஜே.பி.நட்டாவை சந்தித்ததற்காக முடிந்தால் என் மீது திமுக நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏவும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் கு.க.செல்வம். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது. திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏ கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Stalin did not condemn those who insulted the Tamil god Murugan

இதனை தொடர்ந்து, டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்திற்கு சென்ற திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம், ’’தமிழ்க் கடவுள் முருகனை விமர்சித்தவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். திமுக உட்கட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்த வேண்டும். இந்தியாவில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு எல்லா விதத்திலும் இடையூறாக இருக்கும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்ந்த அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கிறேன். பாஜகவில் இணையவில்லை. எனது தொகுதியில் 2 மின்தூக்கிகளை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசவே வந்தேன். Stalin did not condemn those who insulted the Tamil god Murugan

திமுக தலைமைக்கு தகவல் கூறாமல் வந்ததாக செல்வம் தெரிவித்தபோது இதற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு முடிந்தால் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும் என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios