காவிரி நீர் பிரச்சனையில் தி.மு.க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டப் போவதாக அறிவித்திருந்தது இதுபற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன் இது காலங்கடந்த முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது பற்றி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
 அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டும் இந்த கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் சில வாரங்களுக்கு முன்பே கூறியது. ஆனால் தி.மு.கவின் இந்த முயற்சி காலம் கடந்த முயற்சி என்று கருதிகிறேன்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறுவதற்கு முன்பே தி.மு.க இந்த முயற்சியை மேற்கொண்டு இருந்தால் பயன் உள்ளதாக இருந்திருக்கும்.

தற்போது மத்திய அரசு திட்டவட்டமாக முடிவு எடுத்து விட்டது. இருந்தாலும் தமிழகத்தில் நாம் ஒருங்கிணைந்து போராட தேவையுள்ளது. ஆகவே விவசாய சங்கங்கள் முன் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என்பது தான் இப்போது தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.