stalin criticized government and palanisamy
நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ஒதுக்கிய 400 கோடி ரூபாய் எந்த வகையில் செலவிடப்பட்டது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார 400 கோடி ரூபாயை முதல்வர் பழனிசாமி ஒதுக்கினார்.
குட்கா ஊழல் செய்தவர்கள், தற்போது குடிமராமத்து பணிகளிலும் ஊழல் செய்கிறார்கள். நீர்நிலைகளை தூர் எடுப்பதாக கூறி அரசு கஜானாவை தூர் எடுத்து கொண்டிருக்கின்றனர் என ஸ்டாலின் விமர்சித்தார். நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள 400 கோடி ரூபாய் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.
இதையடுத்து சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால், தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ, தெர்மாகோலை வைத்து வெள்ளத்தை தடுப்பார் என கிண்டலாக ஸ்டாலின் விமர்சித்தார்.
