stalin criticize admk

திமுகவை விமர்சிக்கும் தகுதி அதிமுகவினருக்கு கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் எழுதியிருப்பதாவது:

திமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக நகர, ஒன்றிய, மாவட்ட அளவில் பொறுப்புகளுக்கு வந்து பின்னர் மாநில அளவிலான கட்சியின் பொறுப்புகளுக்கு வரமுடியும். கட்சியின் அடிமட்டத்திலிருந்து உழைத்து வருபவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்படும்.

அப்படியாக கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக உழைத்து கட்சியின் செயல் தலைவர் பொறுப்பை தான் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்படி இல்லாமல் ஒரே இரவில் முதல்வர் பதவியை அடைந்து அடுத்த இரவில் பதவியை இழந்து தர்மயுத்தம் நடத்தும் நிலை திமுகவில் இல்லை. எனவே திமுகவை விமர்சிக்கும் தகுதி அதிமுகவினருக்கு கிடையாது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.