தமிழின கலைஞருக்கு தமிழ் திரை உலகின் நினைவேந்தல் நிகழ்வு  இன்று நடைப்பெற்றது. இதில் வளர்ந்து வரும் நடிகர்கள் முதல் சினிமா ஜாம்பாவான்கள் வரை அனைவரும் கலந்துக் கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய  ரஜினிகாந்த்.....

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட இப்போது பதவியில் இருப்பவர்கள் பெரிய ஆட்களா? 

ஒரு கட்சியின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் இருப்பது மிகப் பெரிய ஆளுமையான கலைஞரால் மட்டுமே சாத்தியம்....

அதிமுக அலுவலகத்தில் கலைஞர் படம் இடம் பெறவேண்டும். கலைஞர் இல்லாமல் அரசியல் செய்ய இயலாது என்ற நிலையை உருவாக்கியவர்....

மெரீனாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கியதற்கு மேல் முறையீடு செய்திருந்தால் நானே களம் இறங்கியிருப்பேன்.....சூழ்ச்சிகள் துரோகங்கள் அனைத்தையும் கடந்து கட்சியை வழிநடத்தியவர் கருணாநிதி...அதிமுக உருவானதே கருணாநிதியால்தான்... என்று  பேசினார்.

“கடைசியில் தளபதி அவர்கள் குழந்தை மாதிரி கண்ணீர் விட்டது  என்னால் தாங்க முடியல.....கவலை வேண்டாம்....உடன் பிறப்புகள் இருக்காங்க.. அப்பா வந்த பாதை உங்களை வழி நடத்தும் ..” என  ராஜினிகாந்த்  மேடையில் கூற... தளபாதிக்கு துக்கம் அடைத்துக்கொண்டு  அவர்  கண் காலங்கி நின்றது...

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது எப்போதும் தனி பாசம் அன்பு மரியாதை வைத்திருக்கும் அவரது தொண்டர்களால் இறுதி நேர  அஞ்சலியின் போது ஸ்டாலின் அழுவதை பார்த்து தாங்கிக்கொள்ள  முடியாத இதயங்கள் பல இருந்தாலும்...ரஜினிகாந்த் அவர்களும் அதே  பீலிங் கொண்டுள்ளார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் அவர் வாயால்  பேசிய போது உணர முடிந்ததாக உள்ளது என திமுக தொண்டர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.