stalin condition to prime minister modi

சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் பழமையான தொன்மையான மொழி என தெரிவித்த பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சில கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் பழமையான தொன்மையான மொழி. ஆனால் தமிழை கற்காததை நினைத்து வருந்துகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என்பதை ஒப்புக்கொண்ட பிரதமரின் கருத்தை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது உண்மையென்றால் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் பதிவிட்டுள்ள டுவீட்டில், சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என பிரதமர் அறிவித்திருக்கும் கருத்து, தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது" என்ற பிரதமர் @narendramodi அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்
— M.K.Stalin (@mkstalin) February 17, 2018

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக" அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். #Tamilpride #Thirukural
— M.K.Stalin (@mkstalin) February 17, 2018