தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளை ஆடைகளை கழற்றச் செய்து அதிகாரிகள் அத்து மீறி நடந்து கொண்டது வேதனை அளிப்பதாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் நீட் தேர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கருத்தரங்குகள் நடைபெற்று வருவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நீத் தேர்வின்போது மாணவ-மாணவிகள் அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். சோதனை என்ற பெயரில் அவர்களிடம் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டது வேதனையளிப்பதாக உள்ளது என ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே வரும் ஜுன் 3 ஆம் தேதி கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார் என வீறனார்.
கருணாநிதியுவ் வைர விழாவிற்காக பல்வேறு தலைவர்களை சந்தித்து கனிமொழி அழைப்பு விடுத்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.