91 வயதில் ஸ்டாலின்  ஜனாதிபதி ஆவாரா? அப்படினா தமிழ்நாட்டை விட்டு ஸ்டாலின் போகணும்னு சொல்லவராரா துரை முருகன்? இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சா தெரியவில்லையா? என பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் ஸ்டாலினுக்கு இணையான அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் கிடையாது. அவரைப் போல் மக்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள் யாரும் கிடையாது எனப் பேசிய அவர், அகில இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வரக்கூடியவராக ஸ்டாலின் உள்ளார். இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகக்கூட வரும் தகுதியும் ஸ்டாலினுக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டரில், நண்பர் துரைமுருகனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஸ்டாலின் பிறந்த தேதி 01-03-1953. ஆக அவருக்கு தற்போது வயது 66. இன்னும் 25 வருடங்கள் கழித்து என்றால் 91 வயதில் ஜனாதிபதி ஆவார் என்றால்,  தமிழ்நாட்ட விட்டு போகணும்னு சொல்ல வராரா துரைமுருகன் என நெட்டிசன்கள் தொடங்கி அரசியல் விமர்சகர்கள் வரை இதே கேள்வியை முன்வைத்து வருகிறன்றனர்.

ஸ்டாலின் அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஜனாதிபதி ஆகியிருப்பார் என  பிரசன்னாவின் பேச்சு நெட்டிசன்ஸ் மத்தியில் மரண கலாய்க்கு உள்ளன நிலையில், "25 ஆண்டுகளில் ஜனாதிபதி ஆகும் தகுதி படைத்தவர் ஸ்டாலின் என துரைமுருகன் சொன்னதையும் சேர்த்து வெச்சு செய்கின்றனர்.