Stalin canceled MLA meeting

இன்று மாலை நடைபெறுவதாக இருந்த திமுக எம்எல்ஏ கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்எல்ஏ கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் தங்களது தகுதி நீக்கம் செல்லாது என அறிவிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி துரைசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதித்த தடை நீடிக்கும் எனவும் மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டார். இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இருக்கும் எம்.எல்.ஏக்களை வைத்து பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என நினைத்த முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நீதிமன்றம் தடை நீட்டிக்கப்பட்ட நிலையில் திமுக எம்எல்ஏ கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.