Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கலாம், ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டக் கூடாது..!! வெளுத்துக் கட்டிய அமைச்சர்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கலாம் ஆனால் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க கூடாது. 

Stalin  can be given advice, but do not accuse without evidence, Minister advice.
Author
Chennai, First Published Sep 26, 2020, 11:02 AM IST

விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு அதிமுக அரசு தான் முதலில் குரல் கொடுக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். வேளாண் சட்டமசோதா குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜக-அதிமுக கூட்டணியை விமர்சித்து வரும் நிலையில் அமைச்சர் காமராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதா ஒட்டுமொத்த விவசாயிகளையும் படுகுழியில் தள்ளும் செயல், இந்ந சட்டம் மூலம் நாட்டின் விவசாயிகளை பெரும் முதலாளிகளிடம் அடமானம் வைக்கிறது அரசு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட மசோதாவை ஆதரித்ததன்  மூலம் அதிமுக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

Stalin  can be given advice, but do not accuse without evidence, Minister advice.  

இந்நிலையில் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  கீழகாவாது குடி ஊராட்சியில் அம்மா நகரும் நியாய விலை கடை சேவையை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நியாய விலை பொருட்கள் வழங்கப்படும், எந்தவித காரணமும் கூறி அவர்களுக்கான பொருட்கள் வழங்குவது தட்டிக் கழிக்கக் கூடாது.  தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. 

Stalin  can be given advice, but do not accuse without evidence, Minister advice.

இச்சட்டத்தின் மூலம் இனி இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாற தேவையில்லை, இதற்காகவே இந்த வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால், முதலில் குரல் கொடுப்பது அம்மாவின் அரசாகத்தான் இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கலாம் ஆனால் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க கூடாது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசை பிரதமர் வெகுவாக பாராட்டியுள்ளார். 90% மக்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஊழல் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios