அந்த கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்க விட்டு தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள், ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம், ஆனால் கழக தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் தகராறில் ஈடுபட்டு அந்த பதவிகளில் அவர்கள் வெற்றி பெற்ற நிலையில் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்த நிலையில் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து. அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்படியாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியளித்தது. அந்த மகிழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் மறைமுக தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்து கவலை அடைய வைக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை கண்ணியம் கட்டுப்பாட்டில் மூன்றாவதாக செல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அந்த கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்க விட்டு தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள், ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம், ஆனால் கழக தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்த காலத்திலும் குறைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி, தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர்கள் அந்த பொறுப்பை விட்டு விலகி விட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.