காலை 10 மணியிலிருந்து அமளிக்காடாகி போனது சட்டப்பேரவை. ஓபிஎஸ் குரூப்பும், மு.க ஸ்டாலின் தரப்பில் திமுகவினரும் செய்த அட்டகாசங்களால் ஆடிப்போனார் சபாநாயகர் தனபால்.
ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் அமைதியாகி விட அடங்காத திமுகவினர் தொடர்ந்து அமளி செய்து வந்தனர்.
2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்ட பிறகும் பிரச்சனை தொடந்து கொண்டே இருந்ததால் திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கந்தல் கோலமாகி வெளியே அழைத்து வரப்பட்டார் எதிர்கட்சி தலைவர ஸ்டாலின்.தன் சட்டை பாக்கெட் கிழிக்கப்பட்டு, சட்டை பொத்தான்கள் பிடுங்கப்பட்டு உள்ளே அணிந்திருந்த பனியன் தெரியும்படி கிழிந்த சட்டையோடு நடந்து வந்தார் ஸ்டாலின்.
இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். தன்னை சரமரியாக காவல்துறையினர் தாக்கியதாகவும் அதுவும் இணை ஆணையர் ஷேஷசாயி உத்தரவின் பேரில் தன்னை தாக்கிய காவலர்கள் ஷூ காலால் எட்டி உதைத்து தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டு சட்டையை பிடித்து இழுத்து தாக்கினர்.

சபாநாயகர் தனபால் தனது சட்டை பட்டனை அவரே பிய்த்து கொண்டு நாடகமாடினார் என்று சபை காவலர்களின் இந்த அத்துமீறல் குறித்து ஆளுநரிடம் புகாரளிக்கவும் தற்போது செல்லவுள்ளதகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
கிழிந்த சட்டையோடு ஸ்டாலின் வெளியே வந்து தனது காரிலிருந்து இறங்கி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது,
