அற்புதமான ‘தர்மதுரை’ படத்தை உருவாக்கிய சீனு ராமசாமியின் திரைப்பட பணிகள் தொடர வேண்டும் என முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சீனு ராமசாமி இயக்ககி , விஜய் சேதுபதி, தமன்னா, ஜஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் தர்மதுரை.

இந்த படத்தை பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இப்படத்தை பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தர்மதுரை படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

முக ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில்,

திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட நீங்கள் இயக்குகின்ற படங்கள் எப்போதும் ஒரு சமூக நோக்கம் கொண்டதாக உள்ளதை போலவே, தர்மதுரை படத்திலும் பல சமூக மாற்றங்களை வலியுறுத்துவதாக உள்ளது.

 ‘கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை வரிகளில், யுவன்சங்கர் ராஜா இசையிலான பாடல்,

‘ஆண்டிப்பட்டி கணவாய் காத்து ஆளைத்தூக்குதே’ என்ற பாடலும் இசையும் இதயததில் இன்னிசை ராகம் பாடிக் கொண்டே இருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்பகளை ஏற்று அற்புதமான ‘தர்மதுரை’ படத்தை உருவாக்கியவர் சீனு.ராமாசமி.

சீனு ராமசாமியின் திரைப்பட பணிகள் தொடர வேண்டும் என முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.