கருணாநிதிக்குப் பிறகு கட்சியின்  அதிகாரம் மொத்தமாக ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை சற்றேறக்குறைய கருணாநிதியும் கடந்த சில வருடங்களாக ஒருவாறாக உறுதிப்படுத்தி விட்டு தான் மறைந்திருக்கிறார்.  கருணாநிதி உயிரோடு இருந்தவரை சைலன்ட்டாக அடக்கி வாசித்த  அழகிரி தலை மறைந்ததும் தலைகால் புரியாமல் ஆடிவருவதால் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம் ஸ்டாலின்

மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தலைவர் கலைஞர் அவர்களின் உன்மையான அனைத்து விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம் என் பக்கம் தான் உள்ளனர். என்னை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என ஓபிஎஸ் பாணியில் தனது அதிரடியை ஆரம்பித்தார்.

திமுக தலைவர் மறைந்து ஐந்தே நாளில் அழகிரி அளப்பரையை கூட்ட காரணமென்ன? ஸ்டாலின் அப்படி என்ன சொன்னார்? தலைவர் மறைந்த பிறகு கோபாலபுரத்திற்கு வந்த அழகிரியை கட்சியில் சேர்த்து ஏதாவது பதவி கொடுத்து வைத்து கொள்ளவேண்டுமென குடும்பத்தில் பஞ்சாயத்து நடந்ததாம், இந்த பஞ்சாயத்தின் முடிவில், மீண்டும் தென்மண்டலத்தை அழகிரிக்கு கொடுக்கலாம் என ஸ்டாலின் சொன்னாராம் ஆனால் அழகிரியோ  தலைவர் பதவியோ, வேறு பதவியோ வேண்டாம், பொருளாளர் பதவிதான் வேண்டும் என்று கேட்டுள்ளார். தன்னை உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும், இதற்காக செயற்குழுவில் சரியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தாராம்.

இந்த நிலையில் தான் அழகிரி மீண்டும் கட்சிக்குள் வந்தால், மற்ற பெரிய உறுப்பினர்களை ஓரம்கட்ட பார்ப்பார், அது குழப்பத்தில் முடியும் என்று ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். இந்த நிலையில்தான் ஸ்டாலின் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார். அழகிரிக்கு பதவி கொடுக்க கூடாது என்ற முடிவில்  திமுக தலைமை கழக நிர்வாகிகள் மட்டுமல்ல மாவட்ட செயலாளர்களும் ஒரே நிலைபாட்டில் உள்ளார்களாம்.  

இதனையடுத்து, அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் அழகிரி விஷயத்தை பற்றி பேசியிருக்கிறார். அப்போது ஸ்டாலின் சில விஷயங்கள் பேசிய அன்பழகன் லோக்சபா தேர்தல் முடியும் வரை அவரை சேர்க்காதீர்கள். சேர்த்தால் சரிவராது. நிர்வாகம் சீர்குலையும். இப்போது எல்லாமே சரியா நடந்துட்டு இருக்கு. இதை சீர்குலைக்க அனுமதித்தால் பெரும் பாதகமாக போய் விடும். யார் சொன்னாலும் சரி, எங்கிருந்து நெருக்கடி வந்தாலும் சரி, மீண்டும் திமுகவுக்குள் அழகிரி வரவே கூடாது என  ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்துள்ளார்

அன்பழகன் ஸ்டாலினின் சந்திப்பிற்கு பிறகே அழகிரி தனது குடும்பத்தோடு கிளம்பி சமாதிக்கு சென்று சபதம் போட்டுவிட்டு வந்திருக்கிறார். அனால் ஸ்டாலினோ என்னவென பண்ணிக்கோ கட்சியில் உனக்கு இடமே இல்லை என காட்டமாக பேசியிருக்கிறார்.