வங்கிகளில் பணம் மாற்றும் விவகாரத்தில் பணத்தை மாற்ற வரும் பொதுமக்களின் கைகளில் கருப்பு மை வைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என அறிவித்த மத்திய அரசு செல்லாத நோட்டுக்களை பொதுமக்கள் வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிகொள்ளலாம் என அறிவித்தனர். ஒரு நபர் ஒருநாளைக்கு ரூ 4000 ரூபாயை இவ்வாறு மாற்றலாம் தங்களது அடையாள அட்டையை காட்டி மாற்றிகொள்ளலாம் என அறிவித்தனர்.
இதனால் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்கள் தினமும் வங்கி வாசலில் காத்துகிஅக்கின்றனர். இதில் ஒரே நபர் பல இடங்களில் பணம் எடுப்பதாக புகார் வந்ததை அடுத்து விரலில் மை வைக்கப்படும் என மத்திய நிதித்துறை செயலர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு நாடெங்கும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது ஏன் மை வைக்கவேண்டும் , அந்த மை எத்தனை நாட்களுக்கு நிற்கும். பொதுமக்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பணம் எடுக்கலாம் எனபது போன்ற கேள்விகளுக்கு வங்கி அதிகாரிகள் மத்தியிலேயே பதில் இல்லை.
இந்ந்நிலையில் இந்த மை வைக்கும் திட்டத்தை மேற்கு.வங்காள முதலமைச்சர் மம்தா உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டித்துள்ளனர். மதுரையில் இது குறித்து பேட்டியளித்த திமுக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
கைவிரலில் மை வைக்கும் திட்டம் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். பணம் மாற்றும் விவகாரத்தால் பொதுமக்கள் ஏற்கனவே துன்பப்பட்டு வரும் நிலையில் கைவிரலில் மை வைக்கும் திட்டம் வாக்களிக்கும் மக்களை கேவலப்படுத்துவதாக உள்ளது என்று தெரிவித்தார்.
