திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேர்ந்து இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான நிலை நீடித்து வருகிறது. டிடிவி தினகரனுக்கு ஒவ்வொரு நாளும் எம்எல்ஏக்களின் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது டிடிவிக்கு 22 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போது நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகைள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசுக்கு தற்போது மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், டி.டி.வி. தினகரனும் சேர்ந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என்றும் சு.சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.