அதிமுக பொதுச் செயலாளராக நேற்று பொறுப்பேற்ற சசிகலா கட்சி நிர்வாகிகள் மத்தியில் மேடையில் பேசினார். அவரது முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.

இதுவரை பிரச்சாரங்கள், மேடைகளில் பேசாத சசிகலா, நேற்று நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பேசியது, பெரும் அனைவருக்கும் ஷாக்காக இருந்தது.

இந்நிலையில், சசிகலா பேசுவதற்கான உரையை, எழுதி அவருக்கு பயிற்சி அளித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார் என்பது வரை குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசி பழகியுள்ளார். அவரது பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவுக்கு புரிய வைத்து, முக்கிய நிர்வாகிகள் கற்று கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. அதேபோல், உரை விஷயத்தில் திருப்தியடைந்த பிறகு உடை விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளார் சசிகலா.

எப்போதும் சாதாரண உடை அணியும் சசிகலா, பதவியேற்பின்போது உடை, சிகை அனைத்தையும் பார்த்து பார்த்து தெரிவு செய்துள்ளார். ஜெயலலிதாவை போல் கடைசியில் சொல்ல குட்டிக்கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்தாகவும், ஆனால் கடைசியில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார் என்றும் போயஸ் கார்டன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.