எஸ்.ஆர்.எம்.யூ. கன்னையா வீட்டில் வருமான வரிசோதனை... சிக்கிய பல ஆவணங்கள்..!
சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க பொதுச்செயலாளர் என்.கன்னையா வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க பொதுச்செயலாளர் என்.கன்னையா வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க பொதுச்செயலாளர் என்.கன்னையா. ரயில் நிலையங்களில் இவரது பெயர் எங்கு திரும்பினாலும் இடம்பெற்று இருக்கும். இவர் திமுக விசுவாசியாக கருதப்படுபவர். சாதாரண போர்ட்டராக இருந்தவர் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க தலைவராக இருந்த நமசிவாயம் மறைந்த உடன் கன்னையா வாழ்க்கையில் புதிய உச்சம் தொட்டார். வடசென்னையில் தேர்தலில் நிற்க எம்.பி சீட் கேட்டார்.
யூனியன் சங்க தலைவராக இருந்தபோதும் பலநூறுகோடி சொத்துகள், ஆடம்பர கார்கள் அரண்மனை போன்ற வீடுகளை வைத்துள்ளார் இந்நிலையில் இவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பல ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.