இலங்கை பிரபல தாதா அங்கொடா லொக்கா மனைவி வங்கி கணக்கில் கோடி கணக்கில் பணம்.! சுற்றி வளைத்த இலங்கை போலீஸ்..!
இலங்கை தாதா அங்கொடா லொக்கா வங்கி கணக்கில் 2கோடி பணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது இலங்கை போலீஸ்.இதனால் இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.
இலங்கை தாதா அங்கொடா லொக்கா வங்கி கணக்கில் 2கோடி பணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது இலங்கை போலீஸ்.இதனால் இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.
இலங்கையைச் சேர்ந்தவர் பிரபல சிங்கள தாதா போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா. இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இலங்கை போலீஸாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இலங்கை போலீஸ் பிடியில் தப்பிக்க, தமிழகத்துக்கு தப்பிய அங்கொடா லொக்கா கோவை பீளமேடு பகுதியில் பிரதீப்சிங் என்ற பெயரில் பதுங்கி இருந்தார். ஜூலை 3-ம் தேதி அவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் மதுரைக்கு கொண்டு வந்து தத்தனேரி மின் மயமானத்தில் தகனம் செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் விசாரணையில், அவர் போலி ஆவணங்களின் அடிப்படையில் கோவையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த அவரது காதலி அமானி தான்ஜி, மதுரை ஆனையூர் பகுதியில் வசித்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, ஈரோடு தியானேசுவரன் ஆகியோரை கோவை போலீஸார் கைது செய்தனர். சிம்கார்டு, லேப்-டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர். மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மதுரையில் அங்கடோ லக்காவுக்கு சிவகாமி சுந்தரி, அவரது பெற்றோர் தினகரன். பாண்டியம்மாள் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்ததும், இவர்கள் மூலமே அங்கட லக்காவுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட போலி ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் ஏற்பாடு செய்த தகவலும் வெளியாகின.
இதுபற்றி நிதி சார்ந்த குற்றங்களைத்தடுக்கும் பிரிவு தீவிர விசாரணைகளை நடத்திவருகிறதாக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிப்பிட்டிய – ஓமல்பே பிரதேசத்தைச் சேர்ந்த அபேசிங்ககே நிசங்சலா என்ற பெண்ணின் வங்கிக் கணக்கில் சுமார் 2கோடி பணம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண் அங்கொட லொக்காவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.