Asianet News TamilAsianet News Tamil

பொய்யான செய்தியை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுங்க.. அரண்டு போய் எஸ்பியிடம் புகார் அளித்த பாமக எம்எல்ஏ.!

நான் மருத்துவர் அய்யாவின் தீவிர தொண்டனாக இருந்து  கட்சிப்பணி செய்வதால் தற்போது மயிலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கூட்டணி கட்சியின் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவ சிகிச்சையில் இருந்த காரணத்தினால் என்னால் சந்திக்க முடியவில்லை.

spreads false news...pmk mla sivakumar complaint in villupuram sp office
Author
Villupuram, First Published Jun 11, 2021, 5:33 PM IST

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றதை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து அவதூறு பரப்பி செய்திகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக எம்எல்ஏ புகார் அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மறுபடியும் எம்எல்ஏ ஆக மயிலம் தொகுதி பாமக எம்எல்ஏ சிவக்குமார் மூலம் காய் நகர்த்தி வருவதாகவும் இதற்கு 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவதூறு செய்திகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரம் எஸ்.பி-யிடம் பாமக எம்எல்ஏ புகார் அளித்துள்ளார்.

spreads false news...pmk mla sivakumar complaint in villupuram sp office

அதில், நான் பாமக கட்சியில் மாநில துணைப்பொதுசெயலாளராகவும், தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக கட்சியுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து போட்டியிட்டது. நான் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று மயிலம்  சட்டமன்ற  உறுப்பினராக  மக்கள் பணி செய்து வருகிறேன். 

நான் மருத்துவர் அய்யாவின் தீவிர தொண்டனாக இருந்து  கட்சிப்பணி செய்வதால் தற்போது மயிலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கூட்டணி கட்சியின் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவ சிகிச்சையில் இருந்த காரணத்தினால் என்னால் சந்திக்க முடியவில்லை.

spreads false news...pmk mla sivakumar complaint in villupuram sp office

தற்போது அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றதை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து அவதூறு பரப்பி வருகின்றனர். மேலும், கடந்த 9-ம் தேதியும், 11-ம் தேதியும் சில நாளிதழ்களில் அவதூறு செய்தி வெளியிட்டுள்ளனர். மேற்படி எனக்கும் பட்டாளி மக்கள் கட்சிக்கும் மிகுந்த வேப்பெயரையும் அவதூறையும் ஏற்படுத்திவரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios