Kovai : கோவையை கைப்பற்றும் திமுக.. பயத்தில் எஸ்.பி வேலுமணி.. ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி..

கோவை மாவட்டத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் , மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

Sp velumani vs senthil balaji at kovai mayor election

ஆரம்பத்தில் இருந்தே வேகமாக செல்லும் செந்தில் பாலாஜி, தற்போது அசுர வேகத்தில் வேலை செய்து வருகிறார் என்று  கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி, கோவையை கைக்குள் கொண்டு வந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. எதிர்முகாமான அதிமுகவில் இப்போது வரை யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.குறிப்பாக எஸ்.பி வேலுமணியின் அமைதியை யாரும் எதிர்பாராத ஒன்று என்கின்றனர்.இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘கடந்த மாதம் அதிமுக  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரஸ் மீட்டில் பேசியதுக்கு பிறகு தான், இந்த அமைதி ஏற்பட்டிருக்கிறது. 

Sp velumani vs senthil balaji at kovai mayor election

அதற்கு முன்னாள் வரை கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த அண்ணன் எஸ்.பி.வேலுமணிக்கு, மேலிடத்தில் இருந்து வந்த குடைச்சல் காரணமாக தேர்தலில் வென்றால் என்ன ? தோற்றால் என்ன ? என்ற மன நிலைக்கு வந்துவிட்டார். அன்று பிரஸ் மீட்டில் வேலுமணி பேசியது என்னவென்றால், ‘ எதுக்கெடுத்தாலும் குறை.. என்னையேதான் ஏதாவது பழி சொல்லிட்டே இருக்காரு.. ஓபனா சொல்லணும்னா, நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்னாங்க. அதுக்கு நான் எப்பவுமே ஒரு நியாயமான பதிலை சொல்லுவேன். அவர் கடுமையா என்னை பேசியிருக்கிறார்.  ஆனால், நான் அப்படி பேசியதில்லை. அதுக்கப்பறம் எடப்பாடி அண்ணன் ஆட்சியை காப்பாற்ற, 4 வருடம் தொடர்ந்து ஆட்சியை நடத்த, நானும், தங்கமணி, சிவி சண்முகம் எல்லாரும் பார்த்துக்கிட்டோம்.

Sp velumani vs senthil balaji at kovai mayor election

அதாவது ஆட்சி மாற்றம் ஏற்படாமல் நான்தான் எடப்பாடி அண்ணனுக்கு சப்போர்ட்டா இருந்தேன். இதுல நான் தீவிரமா இருந்தேன். இதுதான் என் மேல கோபம். கோயம்புத்தூரில் 10-ல் 10-க்கு ஜெயிச்சிட்டோம். இதுக்கு காரணம் மக்களுக்கு எல்லாமே செய்து தந்தோம். இதுதான் திமுகவுக்கு 2வது கோபம். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றதால் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை வழங்கினேன். ஆனால், இப்போ திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து கோவையில் சாலைப்பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

என் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என தினமும் பலரை, விசாரணை என்ற பெயரில் போலீசாரும், அதிகாரிகளும் அலைக்கழிக்கிறார்கள். 60 இடங்களில் சோதனை செய்தார்கள். நாங்கள் ஒத்துழைப்பு தந்து கொண்டுதான் இருக்கிறோம். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை, ஆனால் கோவையில் நிலுவையில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசினார். இது அதிமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. 

Sp velumani vs senthil balaji at kovai mayor election

இப்படி எஸ்.பி.வேலுமணியின் புலம்பலுக்கு முக்கிய  காரணம், லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடிச்சுருக்க ஆதாரங்கள் தான். முக்கியமான விஷயம் இதுல என்னென்னு பார்த்தா, அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படியாவது கோவையை கைப்பற்றுடனும்னு வேலை செஞ்சுட்டு இருக்காரு.  வேலுமணி தன்னோட முழு செல்வாக்கையும் பயன்படுத்தி கோவை மேயர் தேர்தலில் ஜெயிச்சிட்டா, நம்ம மேல இருக்குற நம்பிக்கை முதல்வருக்கு போயிடும்னு பயப்படுறாரு. 

Sp velumani vs senthil balaji at kovai mayor election

அதனால தான், முதல்வர் கிட்ட எஸ்.பி.வேலுமணியை எந்தெந்த வழியில மடக்கலாம்னு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துருக்காரு. விரைவில் அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு எஸ்.பி.வேலுமணி கைது செய்யப்படுவார் என்று திமுக வட்டாரங்களில் பேசிக்குறாங்க. அதனால தான் எஸ்.பி.வேலுமணி பெரிய அளவுக்கு வேலை செய்யாமல், அமைதியாக இருக்கிறார்.நிச்சயம் கோவை மாவட்டத்தினை திமுக எளிதில் கைப்பற்றும்.அப்படி அதில் ஏதாவது சிக்கல் இருந்தால், எஸ்.பி.வேலுமணி மீது நிச்சயம் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்படலாம் என்று கூறுகின்றனர்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios