Asianet News TamilAsianet News Tamil

லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.. சிக்கலில் எஸ்.பி. வேலுமணி..!

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் செய்ததாக எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அலுவலகம், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

SP Velumani relative Petition dismissed
Author
Chennai, First Published Nov 7, 2021, 1:47 PM IST

லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது முடக்கம் செய்யப்பட்ட நிரந்தர வைப்பு நிதி ரூ.5.60 கேரிடிய விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர் தாக்கல் செய்த மனுவை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் செய்ததாக எஸ்.பி.வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அலுவலகம், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

SP Velumani relative Petition dismissed

இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சென்னை,கோவை மாநகராட்சிகளில் டெண்டர் பணிகளை மேற்கொண்ட உடுமலைப்பேட்டை பி.எஸ்.லோகநாத் என்பவரை பங்குதாரராக கொண்ட மெட்ராஸ் இன்ஃப்ரா என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள கர்நாடகா வங்கியில் இந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை ரூ.4.95 கோடி, லோகநாத் பெயரில் இருந்த வங்கிக் கணக்கு, ரூ.65 லட்சம் நிரந்தர வைப்பு நிதி ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர்.

SP Velumani relative Petition dismissed

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குக்கும், தங்கள் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் மெட்ராஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் பெயரில் உள்ள நிரந்தர வைப்பு நிதி மற்றும் தனது பெயரில் உள்ள வைப்பு நிதியை விடுவிக்க கோரி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் லோகநாத் மனு தாக்கல் செய்தார்.

SP Velumani relative Petition dismissed

இந்த வழக்கு  நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிக் கணக்கு பணப்பரிமாற்றம் குறித்து நேரில் ஈஜராகி விளக்கம் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய போதும் மனுதாரர் நேரில் ஆஜராகவில்லை. மனுதாரரின் வங்கிக்கணக்கில் குறுகிய காலத்தில் அதிகளவில் பணம் வந்தது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே இந்த சூழலில், மனுதாரர் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கும், லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்க முடியாது கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios