Asianet News TamilAsianet News Tamil

வருமுன் காப்பதற்கு தயாரான தமிழக அரசு! எஸ்.பி.வேலுமணி அதிரடி அறிவிப்பு!

S.P. Velumani Announcement
S.P. Velumani Announcement
Author
First Published Oct 25, 2017, 4:48 PM IST


இந்த வருடம் வடகிழக்கு பருவமழை நாளை முதல் துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் மற்றும் புகார் எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து குறைந்தபட்சம் 75 பணியாளர்கள் பணியாற்றும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-2536 7823, 2538 4965, 2538 3694 25619206 தொலைபேசி வழியாகவும், வாட்ஸ் அப் எண்கள் 94454 77662, 94454 77205 எண்கள் மூலமும் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

பெறப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 2 வாகனம் மூலம் மரம் அறுக்கும் இயந்திரங்கள், 160 கையில் எடுத்துச் செல்லக்கூடிய டீசல், பெட்ரோலால் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், 11 மின் அறுவை இயந்திரங்கள் போன்றவை மண்டல அலுவலகங்களில் இருப்பு வைத்து மழைக்காலங்களில் மரங்கள் சாலைகளில் விழும்போது உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மழை நீர் பெருகும் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 109 மீட்பு படகுகளும், மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட 176 நிவாரண முகாம்களும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்திட சமையல் கூடங்களும், நடமாட மருத்துவ குழுக்களும், 50 அம்மா குடிநீர் மையங்கள் மூலம் மழைக் காலங்களில் பாதுகாப்பான, தரமான குடிநீரை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios