மகனை மடியில் தூக்கிக்கொண்டே விசாகனை கரம்பிடித்த ரஜினி மகள்..! ஸ்டாலின், அழகிரி எண்ட்ரி..!

First Published 11, Feb 2019, 11:37 AM IST
soundarya rajinikanth wedding edapadi palanisamy azhagiri
Highlights

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா மகனை மடியில் தூக்கிக் கொண்டே விசாகனை கரம்பிடித்தார். 

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா மகனை மடியில் தூக்கிக் கொண்டே விசாகனை கரம்பிடித்தார். 

விசாகன் - செளந்தர்யா திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது ரஜினியின் நெருங்கிய உறவினர்களும், முக்கிய தலைவர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தங்கமணி ஆகியோருடன் கலந்து கொண்டார்.

 

நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், உறவினர்களான, கஸ்தூரி ராஜா, செல்வ ராகவன், இசை அமைப்பாளர் அனிருத், ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

பி.வாசு, பிரபு, உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிலையில் மு.க.அழகிரியும் கலந்து கொண்டார்.  

loader