பூரண மதுவிலக்கை விரைவில் ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்தும் நடவடிக்கையை, புதிய முதல்வராக தேந்தெடுக்கப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அம்மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளார். இதற்காக தனியார் தொண்டு நிறுவனத்திடம் திட்ட அறிக்கை கேட்டுள்ளார். இந்த ஆண்டிலேயே அம்மாநிலத்தின் மது கொள்கை மாற்றி அமைக்கப்பட உள்ளது.

முழு மதுவிலக்கு இலக்கை எட்டும் வரை ஒவ்வொரு ஆண்டும் கொள்கை மாற்றி அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் மது விநியோகிக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைகளை குறைப்பது, விலையை அதிகரிப்பது போன்ற அம்சங்களும் புதிய கொள்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.