sonia health is good...ragul in twitter

உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது நலமுடன் உள்ளதாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்று இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிற்று வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சைமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தனது தாயார் உடல்நலம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சிம்லாவில் இருந்த சோனியா காந்திக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. எனவே, அவரை டெல்லி அழைத்துவந்தோம். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சோனியா காந்தி நன்றாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.