sonia gandhi wishes to karunanithi birthday

திமுக தலைவரும் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள்விழா, வரும் 3 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது.

இதையடுஙத்து அன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் அவரது பிறந்த நாள் மற்றும் சட்டப் பேரவையில் கருணாநிதியின் 60-ஆண்டு கால சேவையை பாராட்டி முக்கியமான தேசிய தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, லல்லு பிரசாத் யாதவ் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தற்போது உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் கருணாநிதி அந்த விழாவில் பங்கு பெற வாய்ப்பில்லை இந்நிலையில் ஜுன் 3ம் தேதி தனது 94வது பிறந்த நாளை கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவர் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியாத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்,.