Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி அவசரக் கடிதம்... பீதி கிளப்பும் புதிய நோய்த்தொற்று..!


கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Sonia Gandhi's urgent letter to Prime Minister Modi ... a new epidemic of panic
Author
Tamil Nadu, First Published May 22, 2021, 2:26 PM IST

கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கருப்பு பூஞ்சை தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது.Sonia Gandhi's urgent letter to Prime Minister Modi ... a new epidemic of panic

இந்த தொற்று பாதிப்புள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.Sonia Gandhi's urgent letter to Prime Minister Modi ... a new epidemic of panic

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’கருப்பு பூஞ்சை தொற்றால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios