திருப்பூரில் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் 100 பேர் பாஜகவில் இணைந்தனர், அப்போது தமிழிசை மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தமிழக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பேசி அஜித்தை பற்றியும் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

இதனால் கடுப்பான தல 24 மணி நேரத்திற்குள் தல அஜித் நேரடியாகவோ மறைமுகமாக அரசியலில் ஈடுபடும் ஆர்வம் எனக்கில்லை. என்னுடைய பெயரையோ என்னுடைய ரசிகர்களின் பெயரையோ அரசியலுக்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனக்கு  பிடிக்கும் எனக் கூறியிருந்தார். அஜித்தின் இந்த அறிக்கைக்கு பல அரசியல் தலைவர்களும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி,   ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு. நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும்,  அதிகாரத்திற்கு  அனுக்கமாக இருப்பதற்காகமட்டுமே பலவருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின்தெளிவு மரியாதைக்குரியது.'தல' எப்போதும் ஒரு தனிரகம்! என புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார்.