Asianet News TamilAsianet News Tamil

குடித்து விட்டு கார் ஓட்டினரா திமுக எம்எல்ஏ மகன்... நள்ளிரவு 1.45 மணிக்கு விபத்தின் போது உடனிருந்த பெண் யார்?

இரவு 9.30 மணியளவில் குடும்பத்தினர் அவரை இரவு உணவிற்காக வீட்டில் இருந்து போன் செய்து அழைத்துள்ளனர். ஆனால், தான் இரவு உணவிற்கு வரமாட்டேன். எனது நண்பர்களுடன் செல்கிறேன் என தனது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். 
 

Son of a DMK MLA who drove away drunk ... Who was the woman who was with him at the time of the accident at 1.45 am?
Author
Bangalore, First Published Aug 31, 2021, 11:32 AM IST

இன்று அதிகாலை 1.45 மணிக்கு தமிழகம், ஓசூரைச் சேர்ந்த திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் பெண்கள் உட்பட ஏழு பேர் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சென்ற கார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. Son of a DMK MLA who drove away drunk ... Who was the woman who was with him at the time of the accident at 1.45 am?

பெங்களூரு,கோரமங்களா பகுதியில் உள்ள மங்கள கல்யாண மண்டபத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓசூர் தொகுதியின் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ். விபத்தின் காரணமாக இறந்த ஏழு பேரில் ஓசூர் ஒய் பிரகாஷின் மகன் கருணா சாகர் அந்த காரை இயக்கி உள்ளார்.  இந்த விபத்தில் இறந்த ஏழு பேரில் 28 வயதான டாக்டர் பிந்து, இஷிதா (21) தனஷ் (21), கேரளாவைச் சேர்ந்த அஜய் கோயல்; ஹரியானாவைச் சேர்ந்த உத்சவ், மற்றும் ஹுப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் (23). ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தில் திமுக எம்எல்ஏவின் மகன் கருணா சாகரும், மருமகளுமான பிந்துவும் இறந்தது மிகவும் துயரத்துக்கு ஆளாக்கி இருக்கிறது. ஆனாலும், கருணாசாகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. கார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது விபத்துக்கு முதல் காரணம்.  ஆடம்பர வாகனங்களின் ஏர்பேக்குகள் திறக்கப்படாததால், வாகனத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துள்ளனர் என போலீசார் கூறுகின்றனர்.  இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், உடனே, ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸை அழைத்துள்ளனர். அவர்களை காரில் இருந்து வெளியே இழுத்து சோதித்து பார்க்கையில் அவர்களில் நான்கு பேர் இறந்திருந்தனர். உடலை வாகனத்திலிருந்து வெளியே இழுக்க கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆகியிருக்கிறது.

 Son of a DMK MLA who drove away drunk ... Who was the woman who was with him at the time of the accident at 1.45 am?

இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் மூன்று பேர் முன் இருக்கையிலும், நான்கு பேர் பின் இருக்கைகளிலும் அமர்ந்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி அவர்கள் யாரும் சீட் பெல்ட் அணியவில்லை. அனைத்து சடலங்களும் செயின்ட் ஜான் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஆடி க்யூ 3 வாகனம் முற்றிலும் சேதமடைந்து நொறுங்கியது. காரின் உட்புறம் இரத்தக் கறை படிந்துள்ளது. இடது பக்கத்தில் இரண்டு பின்புற சக்கரங்களும் சுக்கு நூறாகி விட்டன. காவல்துறையின் தகவல் படி, கருணா சாகர் பெங்களூருவுக்கு மருந்து வாங்குவதற்காக நேற்று மாலை ஒசூரில் இருந்து 5.30 மணிக்கு பெங்களூரு கிளம்பியுள்ளார். 

அவர் பெங்களூருவில் வணிகம் செய்து வந்துள்ளார். இரவு 9.30 மணியளவில் குடும்பத்தினர் அவரை இரவு உணவிற்காக வீட்டில் இருந்து போன் செய்து அழைத்துள்ளனர். ஆனால், தான் இரவு உணவிற்கு வரமாட்டேன். எனது நண்பர்களுடன் செல்கிறேன் என தனது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். Son of a DMK MLA who drove away drunk ... Who was the woman who was with him at the time of the accident at 1.45 am?

பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையர் டாக்டர் ரவிகாந்த கவுடா சம்பவ இடத்திற்கு வருகை தந்து, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘’அலட்சியம் மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது. காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான குழுவால் விசாரணை நடத்தப்படும்’’ என அவர் தெரிவித்தார். டிரைவர் குடிபோதையில் இருந்தாரா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் இருந்த மின்கம்பத்தில் மோதி, பின்னர் பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டிடத்தின் சுவரில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய வாகனம் சஞ்சீவினி ப்ளூ மெட்டல் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios