Asianet News TamilAsianet News Tamil

தமிழிசையை சும்மாவிடப் போவதில்லை… மாணவி சோபியா எடுத்த அதிரடி முடிவு !!

தன் மீது பொய் புகார் கூறி சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லாமல் தனது தாய், தந்தையரை பாஜவினரை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சியின்  தமிழக  தலைவர் தமிழிசை மீது  மனித உரிமை ஆணையம் மற்றும்  தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக மாணவி சோபியா தெரிவித்துள்ளார்.

 

Sofia will  complaint against tamilisai human rights commission
Author
Thoothukudi, First Published Sep 4, 2018, 9:35 PM IST

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில்  அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண் பாசிச  பாஜக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனை அடுத்து,  தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. 

Sofia will  complaint against tamilisai human rights commission

பின்னர், அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். 

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா  என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்ப்பட்டது.

Sofia will  complaint against tamilisai human rights commission

ஆனால் சோபியா இன்று நண்பகலில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் இந்த பிரச்சனையை சமுக வலைதளங்களில் டரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

Sofia will  complaint against tamilisai human rights commission

இந்நிலையில் இன்று பிற்பகலில் சோபியாவுக்கு தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது.இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட சோபியாவை ஏராளமானோர் பார்த்து அவரது தைரியத்தைப் பாராட்டினர்.

நேற்று வரை யாரென்றே தெரியாத சோபியா பரிசிச பாஜக ஒழிக என்ற ஒற்றைக் கோஷத்தின மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். தன் மீது எந்தவித குற்றமும் இல்லாத போது தமிழிசை பேசிய பேச்சுக்கள் தன்னை மிகவும் பாதித்தாக தெரிவித்த சோபியா, நான் தமிழிசையை சும்மாவிடப் போவதில்லை என்று சவால் விடுத்தார்.

தமிழக  தலைவர் தமிழிசை மீது  மனித உரிமை ஆணையம் மற்றும்  தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்து அவருக்கு தண்டனை வாங்கித் தருவேன் என்றும் சோபியா தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios